மாநில வளர்ச்சி குழுவினர் நாகை மாவட்டத்தில் இன்று ஆய்வு: விவசாயிகளுடன் கலந்துரையாடல்

மாநில வளர்ச்சி குழுவினர் நாகை மாவட்டத்தில் இன்று ஆய்வு: விவசாயிகளுடன் கலந்துரையாடல்
X

மாம்பழ கூழ் தொழிற்சாலையில்  வளர்ச்சி குழு ஆய்வு செய்தனர். 

மாம்பழ கூழ் தொழிற்சாலை திறக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும் -மாநில வளர்ச்சி குழு

மாநில வளர்ச்சி குழுவினர் நாகை மாவட்டத்தில் இன்று ஆய்வு ; மாம்பழ கூழ் தொழிற்சாலையை செயல்படுத்த விவசாயிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டில் நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில், 5.50 கோடி மதிப்பில் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை திறக்கப்பட்டு இதுவரை பயன்பாட்டுக்கு வராத காரணத்தால் விவசாயிகள் மா விவசாயிகள் பாதிக்கபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காமேஷ்வரம் மாம்பழ கூழ் தொழிற்சாலையில் மாநில வளர்ச்சி கொள்கை குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், முழு நேர உறுப்பினர் சீனிவாசன், பகுதி நேர உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா எம்.எல். ஏ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விவசாயிகளிடம் மாம்பழ கூழ் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட விவசாயிகளிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். கூட்டத்தில் காமேஷ்வரம், விழுந்ந்தமாவடி, பூவைத்தேடி, திருப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலையை நேரில் பார்வையிட்ட மாநில வளர்ச்சி குழுவினர், உயர் ரக தொழில் நுட்ப கருவிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். விரைந்து மாம்பழ கூழ் தொழிற்சாலை திறக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த மாநில வளர்ச்சி குழுவினர், நாகை அக்கரைபேட்டை மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டு மீனவர்களிடம் குறை நிறைகளை கேட்டறிந்தனர்.

Tags

Next Story