நாகை அருகே மீனவர் வலையில் சிக்கிய 41/4 கிலோ எடை கொண்ட சிங்கி இறால்

நாகை அருகே மீனவர் வலையில் சிக்கிய 41/4 கிலோ  எடை கொண்ட சிங்கி இறால்
X

நாகை  அருகே கடலில் மீனவர் வலையில் சிக்கிய அதிசய மீன் சிங்கி இறால்.

நாகை அருகே மீனவர் வலையில் சிக்கிய 41/4 கிலோ எடை கொண்ட சிங்கி இறால் மீனை மீனவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு சென்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி தளத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினம்தோறும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். அதன்படி மீன்பிடித்து விட்டு மீண்டும் கரைக்கு திரும்பிய பொழுது அமிர்தராஜ் என்பவரின் விசைப் படகு வலையில் 41/4 எடை கொண்ட சிங்கி இறால் என்ற லாஸ்டர் இறால் சிக்கி உள்ளது.

கைட்டின் மற்றும் கைட்டோசன் போன்ற வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சிங்கி இறாலின் விலை சர்வதேச அளவில் ஏறுமுகமாகவே உள்ளது. வளரும் நாடுகளில் சிங்கி இறாலுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாலே இதன் விலையும் அதிகமாகவே உள்ளது.1 கிலோ 3000 முதல் 5000 வரை விலை போகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.இந்த இறாலை சக மீனவர்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்