நாகை மாவட்டம் திருக்குவளையில் சாலை வசதி கோரி மறியல் போராட்டம்

நாகை மாவட்டம் திருக்குவளையில் சாலை வசதி கோரி  மறியல் போராட்டம்
X

நாகை மாவட்டம் திருக்குவளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

நாகை மாவட்டம் திருக்கு வளையில் சாலை வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்துள்ளது வாழக்கரை கிராமம். இந்த கிராமத்தில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து இன்று வாழக்கரை கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருக்குவளை வேளாங்கண்ணி சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 100 நாள் தொழிலாளர்களுக்கு நாள்தோறும் வேலை வழங்க கோரியும், ஜீவா நகரில் சாலை அமைத்து தர வலியுறுத்தியும், மேலகட்டளையில் உள்ள மயான சாலையை சீரமைத்து தர வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சாலை மறியல் போராட்டத்தால், திருக்குவளை- வேளாங்கண்ணி சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்குவளை வட்டாட்சியர் சிவக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

உடனடியாக வாழக்கரை கிராம மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து, அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!