வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம்

வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம்
X

வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

வேளாங்கண்ணி ஸ்ரீ ரஜதகிரீஸ்வரர்  ஆலயத்தில் சிவனுக்கு 1008 சங்குகளால் சங்காபிஷேகம் நடைபெற்றது.

கார்த்திகை மாதத்தில், சிவபெருமானுக்கு சங்குகளில் புனித நீர் நிரப்பி அபிஷேகம் செய்வதால், புண்ணிய பலன்கள் ஏற்படும் என்பது ஐதீகம். அதன்படி கார்த்திகை சோம வார கடைசி வாரத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் 1008சங்குகளால் அபிஷேகம் நடைபெற்றது.

சங்காபிஷேகத்தையொட்டி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக, யாகசாலையில், சங்குகள் புனித நீர் நிரப்பப்பட்டு, ருத்ரஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, கடம் புறப்பாடு செய்யப்பட்டு, பூஜிக்கப்பட்ட சங்குகளை சிவாச்சாரியார்கள் சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீர் கொண்டு, சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மஹாதீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!