நாகை வடக்கு பொய்கைநல்லூர் ஸ்ரீபால்மொழி அம்மன் ஆலயத்தில் மஹாசண்டி ஹோமம்

நாகை வடக்கு பொய்கைநல்லூர் ஸ்ரீபால்மொழி அம்மன் ஆலயத்தில் மஹாசண்டி ஹோமம்
X

நாகை வடக்கு பொய்கை நல்லூர் ஸ்ரீபால் மொழி அம்மன் கோவிலில் மஹாசண்டி ஹோமம் நடைபெற்றது.

நாகை அருகே வடக்கு பொய்கை நல்லூர் ஸ்ரீபால்மொழி அம்மன் கோவிலில்பவுர்ணமியையொட்டி மகாசண்டி ஹோமம் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீபால்மொழி அம்மன் ஆலயத்தில் மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு மகாசண்டி ஹோமம் நடைபெற்றது.

ஆலயத்தில் பெரிய தீ குண்டம் அமைக்கப்பட்டு 108 மூலிகை பொருட்கள் மற்றும் தானியங்கள் கொண்டும், பல்வேறு வகையான பழங்கள் கொண்டும் பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த யாக பூஜையில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக குறைவான பக்தர்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!