உயிருடன் விளையாடும் மின்வாரியம்: புதைவட கம்பியில் மின்கசிவால் விபத்து

உயிருடன் விளையாடும் மின்வாரியம்: புதைவட கம்பியில் மின்கசிவால் விபத்து
X

புதைவட மின்கசிவால் உயிரிழந்த ஆடு.

வேளாங்கண்ணியில், மழையால் புதைவட மின்கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி 3 பேர் காயம், ஒரு ஆடு பரிதாபமாக உயிரிழந்தது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி செபஸ்தியார் நகர் 14வது வார்டில், புதைவட மின்சாரம் செல்கிறது. வேளாங்கண்ணியில் பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி பூமிக்கடியில் சென்றுள்ளது. இதனால், புதைவட மின் கம்பியில் இருந்து ஏற்பட்ட மின்கசிவால், அவ்வழியே சென்ற மூன்று நபர்களை மின்சாரம் தாக்கி காயம் அடைந்தனர். அவ்வழியே சென்ற ஆடு மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெருமளவு உயிர்சேதம் தடுக்கப்பட்டது. இப்பகுதியில் சாலைகள் முறையாக சீரமைக்க வில்லை எனவும் பாதாள சாக்கடை பணிகள் முறையாக நடைபெறவில்லை எனவும், மின் புதைவட கேபிள்கள் பாதுகாப்பின்றி பதிக்கப்பட்டுள்ளதாகவும், செபஸ்தியார் நகர் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். புதைவட மின் கம்பியில் மின்சாரம் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare