நாகை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் பேட்டரி திருட்டு

நாகை அருகே  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் பேட்டரி திருட்டு
X

நாகை  அருகே பேட்டரி திருடப்பட்ட லாரிகள்.

நாகை அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான திருட்டு போனது.

நாகப்பட்டினத்தை அடுத்த பொரவச்சேரி பெட்ரோல் பங்க் அருகே இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 லாரிகளில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான 20 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.இன்று காலையில் ஓட்டுனர்கள் வந்து பார்த்தபோது லாரிகளில் பேட்டரிகள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து லாரி உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .அதன்பேரில் கீழ்வேளூர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்ததின் பேரில் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Tags

Next Story
ai marketing future