நாகை மீனவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வேண்டுகோள்

நாகை மீனவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வேண்டுகோள்
X
நாகை மீனவர்களுக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.
போதைப்பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவிக்கவேண்டும் என போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சார்பில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தஞ்சை மண்டல போதைப் பொருள் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் பரத் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர்.

கடலோர பகுதி வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்களை மர்ம நபர்கள் கடத்தி வருவதால் அது குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தாமதமின்றி தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், தகவல் தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் எனவும் போலீசார் மீனவர்களிடம் தெரிவித்தனர். மேலும் கடலோர பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் சுற்றித் திரிந்தாலும் தகவல் அளிக்க வேண்டும் எனவும் மீனவர்கள் போலீசார் வலியுறுத்தினர்.


Tags

Next Story
Weight Loss Tips In Tamil