நாகப்பட்டினம் துறைமுகத்தில் நள்ளிரவு முதல் விடிய, விடிய மீன் விற்பனை

நாகப்பட்டினம் துறைமுகத்தில் நள்ளிரவு முதல் விடிய, விடிய மீன் விற்பனை
X

நாகை துறைமுகத்தில் விடிய விடிய மீன் விற்பனை நடைபெற்றது.

முன்னோர்களுக்கு படைப்பதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் நள்ளிரவு முதல் விடிய, விடிய மீன் விற்பனை நடைபெற்றது.

மாட்டுப்பொங்கலான நேற்று மாலையில் வீட்டு குல தெய்வத்திற்கும், முன்னோர்களுக்கும்,மீன், ஆட்டிறைச்சி, கருவாடு, முட்டைகள் வைத்து படையலிடுவது பொதுமக்களின் வழக்கம். இதற்காக நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நள்ளிரவு முதல் விடிய, விடிய மீன் விற்பனை தீவிரமாக நடைபெற்றது. வஞ்சரம், வவ்வால், இறால், சுரும்பு, பாறை, வாலை, செங்காலா நண்டு, ரால் ,கனவாய் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. வேதாரண்யம்,காரைக்கால் ,திருவாரூர், மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச்சென்றனர்.

ஒரு கிலோ வஞ்சிரம்- நேற்று ரூ. -550 இன்று ரூ. 700இறால் - 500-700வெள்ளை வவ்வால் -800 -950-நண்டு - 650 - 750சீலா - 300-350கருப்பு வவ்வால்- 450 - 550பாறை-300-400 க்கு விற்பனை செய்யப்பட்டன.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself