நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அனுமதியின்றி மண் அள்ளிய 4 பேர் கைது : 2 டிராக்டர், 1 ஜே.சி.பி பறிமுதல்

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அனுமதியின்றி மண் அள்ளிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2 டிராக்டர், 1 ஜே.சி.பி. இயந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே பூலாங்குடி கிராமம் மஞ்சங்கன்னி வாய்க்காலில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக கீழ்வேளுர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்ப்பட்டு, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது மஞ்சங்கன்னி வாய்க்காவில் 2 டிராக்டரில் 4 பேர் களிம்பு மண் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது.

அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, குருக்கத்தி, அய்யப்பன்,பூலாங்குடியைச் சேர்ந்த கந்தகுமார் குருமணங்குடி மாரிமுத்து கீழ்வேளூர், வெள்ளந்திடல் ராஜா என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேர் மீது கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு. செய்து அவர்களை கைது செய்தனர். மண் அள்ள பயன்படுத்திய 2 டிராக்டர்கள், 1 ஜே.சி.பி. இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!