நாகையில் விசைப்படகு மீனவர்கள் படகுகளுக்கு பூஜை

நாகையில் விசைப்படகு மீனவர்கள் 75 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.கடலில் அதிக அளவில் மீன்கள் கிடைக்க வேண்டி படகுகளுக்கு பூஜை செய்தனர்.

நாகையில் விசைப்படகு மீனவர்கள் 75 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.கடலில் அதிக அளவில் மீன்கள் கிடைக்க வேண்டி படகுகளுக்கு ஆயிரக்கணக்கான மீனவர்கள்.பூஜை செய்தனர்.

மீன்பிடி தடை காலம் 61 நாள் முடிந்தும் கொரோனா பரவல் காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் 75 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்தனர். இந்நிலையில், கொரனோ பரவல் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருவதை அடுத்து இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என நாகை மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, இன்று காலை முதல் நாகை காரைக்கால் பூம்புகார் பழையார் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். முன்னதாக படகுகளுக்கும், கடலுக்கும் பூஜை செய்த அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் நாகூர் உள்ளிட்ட 64 கிராம மீனவர்கள் ஆழ்கடலில் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். கடலில் பிடித்து வரப்படும் ஏற்றுமதி ரக மீன்களை வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மீனவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!