/* */

நாகை விசைப்படகு மீனவர்கள் ஏமாற்றம் : குறைந்தளவு மீன்களுடன் கரை திரும்பினர் மீன் விலை கிடுகிடு உயர்வு

நாகை விசைப்படகு மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். மீன்களின் வரத்து குறைந்ததால் மீன் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

HIGHLIGHTS

நாகை விசைப்படகு மீனவர்கள் ஏமாற்றம் :  குறைந்தளவு மீன்களுடன் கரை திரும்பினர்  மீன்  விலை கிடுகிடு உயர்வு
X

நாகை விசைப்படகு மீனவர்கள் பிடித்து வந்த குறைந்தளவு மீன்களை சில்லரை வியாபாரத்துக்கு பெட்டியில் வைத்து அனுப்பும் பணி நடந்தது.

நாகை விசைப்படகு மீனவர்கள் ஏமாற்றத்துடன் அதிகாலை கரை திரும்பினர். மீன்களின் வரத்து குறைந்ததால் மீன் விலை கிடுகிடுவென உயர்ந்தது. டீசல் விலை உயர்வால் கடும் நஷ்டம் என மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.


மீன்பிடி தடைக்காலம் முடிந்தும், கொரோனா பரவல் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 75 நாட்களுக்கு பிறகு கடந்த 30ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். வழக்கமாக 5 நாட்கள் கடலில் தங்கி மீன்பிடிக்க வேண்டிய நிலையில், போதிய மீன்கள் வலையில் சிக்காததால், மூன்று நாட்களிலேயே மீனவர்கள் கரை திரும்பினர். இன்று அதிகாலை நாகை துறைமுகத்திற்கு விசைப்படகு மீனவர்கள் வந்து சேர்ந்த நிலையில், நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு, குறு மீன் வியாபாரிகள் மீன்களை வாங்க திரண்டனர். மீன்களின் வரத்து குறைந்த காரணத்தால் ஊரடங்கிற்கு முன்பு விற்ற விலையைவிட இரண்டு மடங்கு மீன்களின் விலை உயர்ந்துள்ளது.

வஞ்சரம் மீன்: இன்றைய விலை 1,100 ரூபாய் - ஊரடங்கிற்கு முன்பு - 700 ரூபாய்.

பாறை மீன்: இன்றைய விலை 450 ரூபாய் - ஊரடங்கிற்கு முன்பு - 250

கொடுவா மீன்: இன்றைய விலை - 500 ரூபாய் - ஊரடங்கிற்கு முன்பு - 450 ரூபாய்

வெள்ளை வாவல் மீன்: இன்றைய விலை - 1,000 ரூபாய், ஊரடங்கிற்கு முன் - 800 ரூபாய்.

கருப்பு வாவல் மீன்: இன்றைய விலை - 800 ரூபாய்- ஊரடங்கிற்கு முன் - 500 ரூபாய்.


டீசல் விலை உயர்வால் கடும் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும், ஒருமுறை ஆழ்கடல் மீன் பிடிப்புக்குச் செல்ல சுமார் ஒரு லட்சம் ரூபாய் டீசலுக்கு செலவு செய்த நிலையில் தற்போது இரண்டு லட்சம் ரூபாய் டீசலுக்கு மட்டும் செலவாகி இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நாள் ஒன்றுக்கு நாகை துறைமுகத்தில் 50 விசைப்படகு மீனவர்கள் மட்டுமே மீன் விற்பனையில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 July 2021 4:56 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!