/* */

நாகை அருகே 1500 லிட்டர் ஊறல் சாராயம் தரையில் கொட்டி அழிப்பு : இரண்டு பேர் கைது

நாகை அருகே கள்ளச் சாராயம காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் 1500 லிட்டர் சாராய ஊறலை தரையில் கொட்டி அழிததனர்.

HIGHLIGHTS

நாகை அருகே  1500 லிட்டர் ஊறல் சாராயம் தரையில் கொட்டி அழிப்பு : இரண்டு பேர் கைது
X

நாகப்பட்டினம் அருகே கள்ளச்சாராயம், காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து1500  லிட்ட்ர் ஊறல் சாராயம் அழிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால், முன்கூட்டியே மதுபாட்டில்களை வாங்கி வைத்து அதிக லாபத்துக்கு சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் பெரும்பாலான இடங்களில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வடக்குபொய்கை நல்லூர் காரைகுளம் பகுதியில் சாராயம் காய்ச்சப் படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

தகவலின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது காரைகுளம் பனை தோப்பில் பூமிக்கு அடியில், 6 பேரல்களில் 1500 லிட்டர் சாராய ஊறல்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து குழி தோண்டி அந்த 6 பேரல்களையும் போலீசார் வெளியே எடுத்தனர். தொடர்ந்து அதனை தரையில் கொட்டி அழித்தனர்.

இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அப்புக்குட்டி என்கிற முருகானந்தம் (வயது 38), மணிகண்டன் (24) ஆகிய 2 பேரை கைது செய்து மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 4 Jun 2021 3:39 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  2. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  5. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  6. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு