நாகை அரசு மருத்துவமனைக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி சிடடி யூனியன் வங்கி வழங்கியது

நாகை அரசு மருத்துவமனைக்கு 20 ஆக்சிஜன்  செறிவூட்டும் கருவி சிடடி யூனியன் வங்கி வழங்கியது
X

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை சிட்டி யூனியவன் வங்கி சார்பாக நாகை மாலி எம்எல்ஏ, கலெக்டர் பிரவின் நாயரிட்ம் வழங்கினார்.

நாகை அரசு மருத்துவமனைக்கு 20 ஆக்சிஜன் செறியூட்டும் கருவியை சிட்டியூனியன் வங்கி சார்பாக கலெக்டர் பிரவின் நாயரிடம் மாலி எம்எல்ஏ வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் சிட்டி யூனியன் வங்கி மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்க மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து

நாகப்பட்டினம் சிட்டி யூனியன் வங்கி சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தலைமையில் வகித்தார். நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கியின் மேலாளர் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரங்களை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயரிடம் வழங்கினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!