நாகையில் முன்களப் பணியாளர்களுக்கு, பாதபூஜை செய்து கௌரவித்த போலீஸ் இன்ஸ்பெக்டர்
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்களப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்தார்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாகை நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆய்வாளர் பெரியசாமி மீனவர்போல் வேடம் அணிந்து பொது மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்த்தினார்.
அப்போது மாஸ்க் அணியாமல் வலை பின்னி கொண்டு இருக்கும் மீனவரை கொரோனா தொற்று எவ்வாறு கவ்விக் கொண்டு செல்கிறது என்றும். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்வது போன்ற காட்சிகளில் காவல் ஆய்வாளர் பெரியசாமி தத்துரூபமாக நடித்து மீனவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து நோய் தொற்று பரவும் இக்கட்டான சூழ்நிலையில் தன் உயிரை பணயம் வைத்து பொதுமக்களுக்காக போராடி வரும் முன் களப்பணியாளர்களான மருத்துவர், போலீஸ், துப்புரவு பணியாளர் ஆகியோரை கவுரவிக்கும் விதமாக காவல் ஆய்வாளர் பெரியசாமி அவர்களுக்கு பாதபூஜை செய்தார்.
காக்கி உடையில் கம்பீரமாக பணியாற்றும் காவல் துறையினர் மத்தியில், முன் களப் பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து மீனவர்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய நாகை காவல் ஆய்வாளர் பெரியசாமியின் செயல் அப்பகுதி மக்களை வரவேற்பை பெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu