நாகையில் வேர்ல்டு விஷன் இந்தியா சார்பில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

நாகையில் வேர்ல்டு விஷன் இந்தியா சார்பில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
X

வேர்ல்டு விஷன் நிறுவனம் சார்பில் ஊட்டச்சத்து பெட்டகத்தை பயனாளிக்கு வழங்குகிறார் மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ்

வேர்ல்டு விஷன் இந்தியா சார்பில் 3 முதல் 5 வயது வரை ஊட்டச்சத்து குறைவாக உள்ள 292 குழந்தைகளுக்கு பெட்டகம் வழங்கப்பட்டது

வேர்ல்டு விஷன் இந்தியா சார்பில் ரூ 4 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்த பெட்டகத்தை நாகை மாவட்ட ஆட்சியர் குழந்தைகளுக்கு வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் திருமணங்குடியில் வேர்ல்டு இந்தியா சார்பில் நடைபெற்ற நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக நாகை மாவட்ட ஆட்சியர் அ. அருண்தம்புராஜ் மற்றும் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வீ.பி.நாகை மாலி ஆகியோர் பங்கேற்று கீழையூர் ஒன்றியத்தில் உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 3 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைவாக உள்ள 292 குழந்தைகளுக்கு ரூ. 4 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள கொண்டகடலை, நிலக்கடலை, பச்சைபயிறு, நாட்டுச் சர்க்கரை, அவல், பாசிப்பருப்பு, துவரம் பருப்பு உள்ளிட்ட 15 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினர். முன்னதாக வேர்ல்டு விஷன் இந்தியா திட்ட மேலாளர் ஆர். ஜெயலட்சுமி வரவேற்றார்.

Tags

Next Story
ai healthcare products