நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் உலக மீனவர் தினவிழா கொண்டாட்டம்

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில்   உலக மீனவர் தினவிழா கொண்டாட்டம்
X

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் உலக மீனவர் தினவிழா. மீனவர்கள் கடலில் நீச்சல் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் தலைவர் பரிசுகளை வழங்கினார்கள்.

உலக மீனவர்  தினத்தை முன்னிட்டு மீனவ மாணவ நீச்சல் போட்டி ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் உலக மீனவர் தினவிழா. மீனவர்கள் கடலில் நீச்சல் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் தலைவர் பரிசுகளை வழங்கினார்கள்.

தமிழக மீன் வளம் மீனவர் நலத்துறை சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. .மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் தலைமையில் உலக மீனவர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவ மாணவ நீச்சல் போட்டி ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளை மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் துவக்கி வைத்தார் . இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் தலைவர் கௌதமன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

மேலும், கடலில் தொழில் செய்து கொண்டிருக்கும் போது இயற்கை பேரிடர் ஏற்பட்டால், எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் மீனவர்களுக்கு பயிற்சி அளித்தனர் இதேபோன்று கடலில் தொழில் செய்து கொண்டிருக்கும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டாலோ அல்லது விபத்துகள் ஏற்பட்டாலும் எவ்வாறு முதலுதவி செய்து, மீனவரை பத்திரமாக கரைக்கு அழைத்து வருவது என்பது குறித்து அரசு மருத்துவர்கள் மீனவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பாக மீனவர்களுக்கு ஜிபிஎஸ் எனப்படும் இருப்பிடம் காட்டும் கருவி 50க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது . பின்னர் மீன்வள வளர்ச்சி கழக தலைவர் பேசுகையில் கடல் மற்றும் மீன் வளத்தை பாதுகாக்க மீனவர்கள் கடலிலும் கடற்கரையிலும் பாலிதீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து மாசற்ற கடலை உருவாக்க வேண்டுமென மீனவர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!