வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி துவக்கம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி துவக்கம்
X

வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று சாம்பல் புதன்கிழமையையொட்டி திருப்பலி பூஜை நடைபெற்றது.

வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் துவங்கியது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3 ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் துவங்கியது.

இதையொட்டி நாகை மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி இன்று காலை நடைபெற்றது. பேராலயத்தில் நடைபெற்ற 40 நாள் தவக்காலம் சிறப்புத் திருப்பலியில் பங்கேற்ற ஏராளமான கிறிஸ்தவர்களுக்கு அருட் தந்தைகள் நெற்றியில் விபூதி பூசினர். சிறப்பு திருப்பலியில் ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வந்து நாட்டு மக்கள் அமைதியாக வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி