நாகை- மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் வழங்கினார்.

நாகை மாவட்டத்தில் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் வாரவிழா நடைபெற்றது.

விழாவில் 1 முதல் 19 வயது வரையிலான சிறுவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வழங்கினார். நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 951 சிறுவர்கள், பள்ளிசொல்லும் மாணவர்கள், இளைஞர்களுக்கும், 41 ஆயிரத்து 899 மகளிருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் இரண்டு கட்டங்களாக வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.

நாகை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் வளர்ச்சி மையங்கள் மூலமாக வரும் 28ஆம் தேதி வரை குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.


Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்