நாகை மருத்துவ கல்லூரி கட்டுமான பணியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு

நாகை மருத்துவ கல்லூரி கட்டுமான பணியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு
X

நாகையில் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணியை அமைச்சர்  மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

நாகை மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை அமைச்சர் மா .சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகை மாவட்டத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்டமாக வேளாங்கண்ணியில் பொது சுகாதாரத் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த 6வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார். தொடர்ந்து நாகை மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது, அதிகாரிகளிடம் கட்டுமான பணிகள் குறித்தும், மருத்துவ கல்லூரியின் வடிவைப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், அதே பகுதியில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர், வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து மருந்துகள் கொடுக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் நாகை அரசு தலைமை மருத்துவனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் நாகை மாவட்டத்தில் இதுவரை 70 சதவீத பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 68 சதவீத பேருக்கு இதுவரை முதல் தவணை தடுப்பூசியும், இரண்டாம் தவணை தடுப்பூசி 26 சதவீதமும் போடபட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களே ஆன நிலையில், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 25 லட்சம் பேருக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் ஒரு கோடி பேருக்கு மருத்துவம் பார்க்க இலக்கு நிர்ணயித்து இருப்பதாக அவர் தெரிவித்தார். நாகை மாவட்டத்தில் 12 கிராமங்கள் 100 சதவீதம் முதல் தவணை செலுத்தி உள்ளனர். நாகை உள்ளிட்ட தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் 11 மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் நிறைவுபெற்ற நிலையில், இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை தொடங்க வருகின்ற புதன் கிழமை 27 ஆம் தேதி மத்திய அரசின் அதிகாரிகளை சந்திக்க உள்ளோம். ஏற்கனவே 850 மாணவர்களை சேர்ப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் இந்த ஆண்டு 800 மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கு அனுமதி கிடைக்க இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் சிதலமடைந்து காணப்படுகின்ற ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களை சீரமைக்க 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மழை காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க உள்ளாட்சி நிர்வாகம் சார்பாக அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.


Tags

Next Story