நாகையில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

நாகையில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
X

நாகை  கீழையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகை கீழையூரில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாள் விழா அணிவகுப்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களை கொண்ட ஊர்திகள் இடம்பெறும்.இந்நிலையில், வ.உ.சிதம்பரனார், வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கும் தமிழகத்தின் அலங்கார ஊர்தியை இந்தாண்டு மத்திய அரசு நிராகரித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம்,கீழையூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கீழையூர் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிக்கைகளை விளக்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்டச் செயலாளருமான மாரிமுத்து தலைமையில் கூட்டம் நடைபெற்றது .இதில் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு,அலங்கார ஊர்தியை நிராகரித்ததை கண்டித்தும்,கண்டன உரை நிகழ்த்தப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்