நாகையில் நடுக்கடலில், கடல் சீற்றத்தால் கடலுக்குள் விழுந்த மீனவர் பலி

நாகையில் நடுக்கடலில், கடல் சீற்றத்தால் கடலுக்குள் விழுந்த மீனவர் பலி
X

நடுக்கடலுக்கு மீனவர் சென்ற விசை படகு 

நாகையில் நடுக்கடலில், கடல் சீற்றத்தால் கடலுக்குள் விழுந்த மீனவர், சக மீனவர்களின் கண் முன்னே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடலோர காவல் படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த அஞ்சம்மாள் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 2 ஆம் தேதி சந்திரன், கதிரேசன், சக்திவேல், பிரபாகர் உள்ளிட்ட 7 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.


நாகைக்கு நேர் கிழக்கே நடுக்கடலில் வலை வீசி மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது காற்று மற்றும் கடல் சீற்றத்தின் காரணமாக விசைப்படகின் ஓரத்தில் நின்று வலைப்பற்றி கொண்டிருந்த சந்திரன் திடீரென கடலில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதனை கண்ட சக மீனவர்கள் அவரை தேடிய நிலையில் அரை மணி நேரத்திற்கு பிறகு சந்திரன் சடலமாக மீட்கப்பட்டார். அதனை தொடர்ந்து அதிகாலையில் நாகை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட மீனவரின் சடலத்தை கண்ட உறவினர்கள் மற்றும் மீனவ பெண்கள் கதறி அழுது தங்களுடைய வேதனையை வெளிப்படுத்தினர்.


பின்னர் சடலத்தை கைப்பற்றிய கடலோர காவல் குழும போலிசார் பிரேத பரிசோதனைக்காக மீனவரின் சடலத்தை நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story