/* */

நாகை தெற்குபொய்கைநல்லூர் செல்லியம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம்

காய்கறி விவசாயம் செழிக்கவும், விவசாயத்தை பாதுகாக்கவும் வேண்டி காய்கறி சண்டிஹோமம் நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

நாகை தெற்குபொய்கைநல்லூர் செல்லியம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம்
X

தெற்குபொய்கைநல்லூர் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் விவசாயம் செழிக்க வேண்டி 3 டன்கள் காய்கறி பழங்கள் கொண்டு சிறப்பு சண்டிஹோமம் நடைபெற்றது.

தெற்குபொய்கைநல்லூர் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் விவசாயம் செழிக்க வேண்டி 3 டன்கள் காய்கறி பழங்கள் கொண்டு சிறப்பு சண்டிஹோமம். நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்பு.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குபொய்கைநல்லூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் நடைபெற்ற சண்டி ஹோமத்தில் தெற்கு பொய்கை நல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விளையக்கூடிய கத்திரிக்காய், மாங்காய், வெண்டைக்காய், பாகற்காய் கீரை, பனங்கிழங்கு, எலுமிச்சை, நார்த்தங்காய் , வாழை, கரும்பு, கொய்யா உள்ளிட்டவை 3 முதல் 4 டன் காய்கறிகள் கொண்டு யாக குண்டம் அமைக்கப்பட்டு 2000 லிட்டர் நெய் உள்ளிட்டவைகளை கொண்டு சிவாச்சாரியர்கள் சிறப்பு வேள்வி நடைபெற்றது.

தொடர்ந்து தங்கள் கிராமத்தில் விளைவிக்கக் கூடிய காய்கறிகள் சுற்றியுள்ள திருவாரூர் கும்பகோணம் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் காய்கறி விவசாயம் செழிக்க வேண்டியும் இயற்கையிடமிருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய தொடர்ந்து 9வது ஆண்டாக இந்த காய்கறி சண்டிஹோமம் நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். யாகத்தில் வைக்கப்பட்டுள்ள கடல்நீர் பூஜைக்கு பிறகு செல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 1 March 2022 9:44 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்