கராத்தே பயிற்சி முடித்த மாணவ மாணவிகளுக்கு கருப்பு பட்டை- விருது

கராத்தே பயிற்சி முடித்த மாணவ மாணவிகளுக்கு கருப்பு பட்டை- விருது
X

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு போலீஸ் சூப்பிரண்ட் ஜவகர் சான்றிதழ் வழங்கினார்.

நாகையில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கருப்பு பட்டை மற்றும் சான்றிதழ்களை கண்காணிப்பாளர் ஜவகர் வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் அடுத்துள்ள விழுந்தமாவடி சாய் காய் டூ அட்வன்ஷர் அகாடமி ஆஃப் மார்ஷியல் ஆர்ட்சஸின் சார்பில் கிராமபுற மாணவ மாணவிகளுக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சிகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த பயிற்சியை மூன்றாண்டுகள் முடித்து அண்மையில் நடைபெற்ற கராத்தே கருப்பு பட்டைய தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா வேளாங்கண்ணியில் நடைபெற்றது.

மாணவிகள் நடத்திய கராத்தே செயல்விளக்க காட்சி.

விழாவின் சிறப்பு விருந்தினரான நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கருப்பு பட்டை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அதனை தொடர்ந்து தற்காப்பு கலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி தற்காப்பு கலைகள் செய்து காண்பிக்கப்பட்டது.இதில் ஏராளமான பெற்றோர்கள் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!