வேளாங்கண்ணியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் தொடக்கம்

வேளாங்கண்ணியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் தொடக்கம்
X

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. புனித ஆரோக்கிய மாதா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் பொது மருத்துவம், ரத்த அழுத்தம், இதய பரிசோதனை பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட இருபத்தி மூன்று பிரிவுகளில் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி நாகை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!