நாகை அருகே உவர் மண்ணில் மாப்பிள்ளை சம்பா சாகுபடி செய்து பட்டதாரி சாதனை
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடியை சேர்ந்தவர் அலைஅருண் எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு காமேஸ்வரம் ஊராட்சி தாண்டவமூர்த்திகாடு கடலோர பகுதியில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. சுனாமியால் அப்பகுதியில் கடல்நீர் உட்புகுந்து உவர் நிலமாக இருந்த நிலையில் சென்ற ஆண்டு நவீன ரக நெல்லை சோதனை முறையில் சாகுபடி செய்தார்.
அது சரிவர விளைச்சல் இல்லாத நிலையில் தனது தாத்தா ஆலோசனைப்படி பாரம்பரிய நாட்டுரகமான 180 நாட்கள் கொண்ட வெள்ளம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதும் ஆளுயர ஏழு அடி வரை வளரக் கூடிய மாப்பிள்ளை சம்பா சாகுபடியை உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்காமல் எந்தவித ரசாயனமும் கலக்காமல் இயற்கையான முறையில் 5 ஏக்கரில் சோதனை முறையில் சாகுபடி செய்து தற்பொழுது அறுவடைக்கு தயாராக உள்ளது.
இது தொடர்பாக விவசாயத்தில் ஆர்வம் கொண்ட பட்டதாரி இளைஞர் அலைஅருண் கூறும்போது பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி,பனங்காட்டு குடவாழை,நேபாள சீரகசம்பா,வெள்ளைப் பொன்னி,கொத்தமல்லி சம்பா,பிசினி,சீரக சம்பா,அறுபதாம் குறுவை, குழியடிச்சான்.கருப்பு கவுனிஉள்ளிட்ட நெல் ரகங்களை மீட்டெடுக்கும் வகையிலும் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் இருக்கவேண்டுமென என்பதற்காகவும் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து வருகிறேன். அடுத்த ஆண்டு பல்வேறுநெல் ரகங்களை சாகுபடி செய்ய உள்ளேன். இந்த சாகுபடி செய்வது மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.ர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu