நாகை அரசு மருத்துவ கல்லூரியை வருகிற 12 -ம் தேதி பிரதமர் திறப்பு
வருகிற 12ம் தேதி திறக்கப்பட உள்ள நாகை அரசு மருத்துவ கல்லூரி.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி நாகை மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தில் 366.85 கோடி ரூபாய் மதிப்பில், 60.4 ஏக்கர் பரப்பளவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில், பணிகள் நிறைவடைந்த மருத்துவக்கல்லூரியை இந்திய பிரதமர் நரேந்திரமோடி வருகின்ற 12 ஆம் தேதி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி, மாணவ மாணவியர் தங்கும் விடுதி என மூன்று பெரிய கட்டிடங்கள் உட்பட நிர்வாக அலுவலகம், பிணவறை என மொத்தமாக 22 கட்டிடங்கள் அங்கு இடம்பெற்றுள்ளன.
உடற் கூறுயியல், உடலியங்கியியல், உயிர் வேதியியல் என மூன்று துறைகளை கொண்டு செயல்பட உள்ள மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு முதல் 150 மாணவர்களை கொண்டு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. மருத்துவ கல்லூரியில் 40 கணினிகளை கொண்டு இணையநூலகம், புத்தக நூலகம், தேர்வரை, செய்முறை ஆய்வகம், என நவீன பிரத்யேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற 12 ஆம் தேதி பிரதமர் மருத்துவ கல்லூரியை திறக்க உள்ள நிலையில் அங்கு வர்ணம் பூசுதல், தூய்மை பணிகள் என முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu