நாகை அருகே அரசு லாரி திருட்டு: இரண்டு இளைஞர்கள் கைது

நாகை அருகே அரசு லாரி திருட்டு: இரண்டு இளைஞர்கள் கைது
X

பைல் படம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் லாரியை திருடிச் சென்ற இரண்டு இளைஞர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் நிறுத்தி வைத்திருந்த லாரியை திருடிச் சென்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், காட்டூர் கலையரசன் என்பவர் கீழ்வேளூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் தனக்கு சொந்தமான லாரியை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார்.

லாரியை வழக்கமாக நிறுத்தும் கீழ்வேளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள கிடங்கில் நிறுத்தி வைத்திருந்தார். சம்பவத்தன்று காலை லாரி காணவில்லை என அங்குள்ள ஊழியர்கள் ஓட்டுனருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து லாரி ஓட்டுனர் இதுகுறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் தேவூர் அருகே வெண்மணி ஆர்ச் அருகில் வாகன சோதனை மேற்கொண்டனர்,

அவ்வழியாக லாரியில் வந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்ததில் லாரியை திருடி வந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் கீழ்வேளூர் அருகே இறையான்குடி, சந்திர படுகை பகுதியைச் சேர்ந்த தனசேகரன், வலிவலம் பகுதியைச் சேர்ந்த சிவபாலன் என்பதும் தெரிய வந்தது.

பின்னர் லாரியை பறிமுதல் செய்த கீழ்வேளூர் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!