நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உணவுத்துறை அமைச்சர்   ஆய்வு

நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உணவுத்துறை அமைச்சர்   ஆய்வு
X

நாகையில்  நெல்கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

கஜா புயல் அடித்து 3 ஆண்டுகள் ஆகியும் சேதமடைந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் சீரமைக்காதது குறித்து அமைச்சர் விசாரணை

கஜா புயல் அடித்து மூன்று ஆண்டுகள் ஆகியும் சிதிலமடைந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை சீரமைக்காதது குறித்து அதிகாரிகளிடம் உணவுத்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று ஆய்வு மேற்கொண்டார். திருக்குவளை மற்றும் நீர்மூளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிதிலமடைந்த நிலையில் இருந்த கொள்முதல் நிலையத்தை பார்த்து அதிகாரிகளைக் கண்டித்தார். சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்த அமைச்சர், கஜா புயல் அடித்து மூன்று ஆண்டுகளாகியும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை சரி செய்யாமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள சிதிலமடைந்து கிடக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து சரி செய்ய வேண்டும் என்று ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், நாகை மாவட்டம் முழுவதும் கஜா புயலின் போது சேதமடைந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைந்து சீரமைக்கப்படும். வாடகையில் இயங்கிவரும் 26 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர கட்டிடம் இந்த ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும். நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக அரிசி அரவை ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னதாக அமைச்சர் அவர்கள் திருக்குவளையில் உள்ள கலைஞர் பிறந்த இல்லத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி மற்றும் முரசொலிமாறன் ஆகியோரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், நிகழ்வில், நாகை மாவட்ட பொறுப்பாளர் கௌதமன், முன்னாள் அமைச்சர் மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!