இலங்கையிலுள்ள மீனவர்களை விடுதலை செய்ய கோரிக்கை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 20 பேரையும், படகுகளையும் விடுவிக்கக்கோரி உறவினர்கள் கலெக்டர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கோடிமாரி மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு சொந்தமான இரு விசைப்படகுகளில் அதே ஊரைச் சேர்ந்த 20 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் சர்வதேச கடல் எல்லையில் இன்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகப்பட்டினம் மீனவர்கள் 20 பேரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 20 பேரையும் காங்கேசன் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு இலங்கை கடற்படை அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிறை பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 20 பேரையும் 2 விசைப் படகுகளையும் மீட்க வலியுறுத்தி இன்று அக்கரைப்பேட்டை கிராம தலைவர்கள் நாகை கலெக்டர் பிரவீன் நாயர் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அப்போது அங்கிருந்த மீனவர்களின் உறவினர்கள் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் , வேண்டுகோள் விடுத்தனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!