மீனவர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் அறிவித்த அமைச்சர்

மீனவர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் அறிவித்த அமைச்சர்
X

அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மீனவர்களின் நலத் திட்டங்கள் முழுமையாக மீனவர்களுக்கு சென்றடையும் என அமைச்சர் ஓஎஸ் மணியன் பேசினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தனி தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ. எஸ் மணியன் தனது தேர்தல் பிரச்சாரத்தை கீழையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செருதூர், பிரதாபராமபுரம், காமேஸ்வரம் விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் தொடங்கினார். டீசல் மானியம் ஆண்டொன்றுக்கு 18000 லிட்டரிலிருந்து 20,000 லிட்டர் ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மீனவர்கள் நலன் மற்றும் சேமிப்பு நிவாரணத்தொகை ரூபாய் 4500 இல் இருந்து 5500 ஆக உயர்த்தி வழங்கப்படும். மீனவர்கள் கடன் பெறுவதற்கான மீனவர் நல தனி வங்கி உருவாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் மாம்பழ சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!