120 கிலோ கஞ்சா மூட்டைகள் தோண்டியெடுப்பு

120 கிலோ கஞ்சா மூட்டைகள் தோண்டியெடுப்பு
X
கடல் கரையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 120 கிலோ கஞ்சா மூட்டைகளை தோண்டியெடுத்த போலிசார்.கடத்தல் கும்பலுக்கு கியூ பிரிவு போலிசார் வலைவீச்சு

நாகை மாவட்டம், புதுபள்ளி கிராமத்தில் கடற்கரை ஓரம் கஞ்சா மூட்டைககள் பதுக்கி வைத்திருப்பதாக நாகை கடலோர காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நாகை கடலோர காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலிசார் புதுபள்ளி கடற்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கன்டியன்காடு, கலைச்செல்வன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கஞ்சா மூட்டைகள் புதைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. பின்னர், போலிசார் தோண்டி எடுத்து பார்த்த போது மூன்று கஞ்சா மூட்டைகளில் 1 மூட்டைக்கு 20 பார்சல்கள் வீதம் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 120 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த நாகை கடலோர காவல் குழும போலிசார், கஞ்சாவை புதைத்து பதுக்கி வைத்த கும்பல் யார்? இலங்கைக்கு கடத்த பூமியில் புதைத்து வைக்கபட்டதா? போன்ற பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story