ஜால்ராக்கள் போல் இபிஎஸ்,ஓபிஎஸ் உள்ளனர் -சீதாராம் யெச்சூரி

ஜால்ராக்கள் போல் இபிஎஸ்,ஓபிஎஸ் உள்ளனர் -சீதாராம் யெச்சூரி
X

தமிழகத்தில் தெருக்கூத்துகளில் பின்பாட்டு பாடும் ஜால்ராக்களை போல முதல்வர் பழனிச்சாமியும் துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் மத்திய அரசுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர் என சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி திருக்குவளையில் பேசினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று அக்கட்சியின் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நாகை மாலியை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் பாஜக அரசு விவசாயிகள் குறித்து எந்த கவலையும் கொள்ளவில்லை. ரயில்வே, கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது. இதனால் வரும் இளைய தலைமுறை பெரும் பாதிப்பை அடையும் எனவும், தெருக்கூத்துகளில் பின்பாட்டு பாடும் ஜால்ராக்களை போல முதல்வர் பழனிச்சாமியும் துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் பிரதமர் மோடிக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில் லவ் ஜிகாத் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டு மனித உரிமை மீறப்படுகிறது. இந்த நிலை தமிழகத்தில் ஏற்படாமல் தடுக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென சீதாராம் யெச்சூரி கோரிக்கை விடுத்தார். முன்னதாக திருக்குவளையில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்குச் சென்று அங்கு உள்ள நூலகம் மற்றும் திருவுருவப் படங்களை அவர் பார்வையிட்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!