நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்ட மீனவர்கள் அவசர ஆலோசனை
நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மத்திய அரசின் புதிய மீன்பிடி மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குவலை, இரட்டைமடி வலைகளை கடலில் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனவும் இன்று நடைபெற்ர அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்ட மீனவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அக்கரைப்பேட்டை தரங்கம்பாடி காரைக்கால்மேடு உள்ளிட்ட 60 கிராமங்களைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மீன்பிடி மசோதாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தும், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குவலை மற்றும் இரட்டைமடி வலைகளை கடலில் பயன்படுத்த அரசு அனுமதிக்கக் கூடாது எனவும் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய அரசின் புதிய மீன்பிடி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால், மீனவர்களின் உரிமைகள் நசுக்கப்படும் என குற்றம்சாட்டியுள்ள மீனவர்கள், மத்திய அரசு புதிய சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டுமென்றும், மீன் குஞ்சுகளை அழிக்கும் இரட்டை மடி வலைகளையும், சுருக்குவலைகளையும் அடியோடு தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் அந்த அழைப்பை புறக்கணிப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu