யானை காெடுப்பதாக கூட முதல்வர் கூறுவார்-பாலகிருஷ்ணன்

யானை காெடுப்பதாக கூட முதல்வர் கூறுவார்-பாலகிருஷ்ணன்
X

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வீட்டிற்கு ஒரு யானை கொடுப்பேன் என கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நாகை மாலி, ஆளுர் ஷாநவாஸை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று நாகை மாவட்டம் சிக்கலில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய கே.பாலகிருஷ்ணன், சாமானிய மக்களை பாதிக்கும் பெட்ரோல் டீசல், விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் ஏற்றி வைத்து விட்டு, தேர்தலுக்காக 6 சிலிண்டர் இலவசம் என கூறி மக்களை ஏமாற்றுவதாக குற்றம் சாட்டினார்.விட்டால் ஒவ்வொரு வீட்டுக்கும் யானை இலவசமாக கொடுப்பேன் என எடப்பாடி பழனிச்சாமி கூறினாலும் கூறுவார் என அவர் கிண்டல் செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!