ஓட்டுக்கு பணம் இல்லை : இளைஞர்கள் ஆதரவு தரணும் - மநீம வேட்பாளர்

ஓட்டுக்கு பணம் இல்லை : இளைஞர்கள் ஆதரவு தரணும் - மநீம வேட்பாளர்
X
தேர்தலில் நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம் . இளைஞர்கள் எங்களுக்கு ஆதரவு தரணும் என்று மக்கள் நீதி மய்ய வேட்பாளர் பிரசாரம்.

நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம். ஆனால், இளைஞர்கள் தான் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று மநீம வேட்பாளர் சித்து வாக்கு சேகரித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தனித்தொகுதியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளராக போட்டியிடும் டாக்டர்.சித்து திருக்குவளை, கீழ்வேளூர், தேவூர், மகிழி, கீழையூர் ,சீராவட்டம், எட்டுக்குடி, திருமணங்குடி, வெண்மணிச்சேரி, ஈசனூர்,திருவாய்மூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார். மக்கள் நீதி மய்ய தொண்டர்கள், மற்றும் கூட்டணி கட்சியினரும் பைக்கில் முன்னே செல்ல வேட்பாளர் டாக்டர் சித்து வீடுவீடாக சென்று டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய வேட்பாளர், 'நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம். இளைஞர்கள் தான் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.' என்று கேட்டுக்கொண்டார். பொது மக்களிடமும் வாக்கு சேகரித்தார். இதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடம் நலம் விசாரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story
the future of ai in healthcare