நாகை அருகே மழை நீர் வடியாததால் நெல்மணிகள் முளைக்கும் அபாயம்
நாகை அருகே நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் நெம்மேலி திருகண்ணங்குடி, அகரம் உள்ளிட்ட கிராமங்களில் சமீபத்தில் மழையால் அறுவடை செய்ய இருந்த 1000ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி முளைத்து போய் உள்ளது
மேலும் கோ.46, 1009, பிபிடி நெல் ரகங்கள் மழையால் பயிர்கள் வயலில் சாய்ந்து 135 நாட்கள் விளைச்சல் கண்டு பொங்கல் சமயத்தில் அறுவடை செய்ய இருந்த நேரத்தில். தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் முளைக்க துவங்கி உள்ளது.மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இனி அந்த பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 25 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் இப்படி ஆகி விட்டது எனவும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள மகசூல் இழப்பு குறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீட்டிற்கும் பரிந்துரைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu