வேளாங்கண்ணியில் தி.மு.க. சார்பில் அண்ணன்- தங்கை வேட்புமனு தாக்கல்

வேளாங்கண்ணியில் தி.மு.க. சார்பில் அண்ணன்- தங்கை வேட்புமனு தாக்கல்
X

வேளாங்கண்ணி பேரூராட்சியில் தி.மு.க. வேட்பாளர்களாக அண்ணன்- தங்கை வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.

வேளாங்கண்ணி பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் அண்ணன், தங்கை உள்ளிட்ட தி.மு.க.வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்ய பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டனர். தி.மு.க. சார்பில் 3வதுவார்டில் போட்டியிடும் தாமஸ் ஆல்வா எடிசன்,5வதுவார்டில் போட்டியிடும் அவரது தங்கை டயானா சர்மிளா ஆகியோர் மக்கள் புடைசூழ வேளாங்கண்ணி பேரூராட்சியில் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேளாங்கண்ணி பேரூராட்சியில் 90 சதவீத பெண் வேட்பாளர்களுக்கு தி.மு.க.வில் வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!