செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
நாகையில் கடல் உயிரினங்களை பாதுகாக்கும் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணிகளை நடுக்கடலில் மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார்.
நாகையில் கடல் உயிரினங்களை பாதுகாக்கும் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணிகளை நடுக்கடலில் மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். மீன்கள் மற்றும் கடலிலுள்ள இதர உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும், இனப்பெருக்க தளமாகவும் பவளப்பாறைகள் விளங்கி வருகிறது. இந்நிலையில் கஜா புயலில் இயற்கை சீற்றத்தால் கடல் பகுதிகளில் இருந்த பவளபாறைகள் கடுமையாக சேதமடைந்து மீன்வளம் பாதிக்கபட்டதை தொடர்ந்து நடுக்கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி நாகை மாவட்டத்தில் நடுக்கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணிகள் இன்று நடைபெற்றன. 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூம்புகாரில் தயாரிக்கப்பட்ட செயற்கை பவளப்பாறைகளை நாகையில் உள்ள நடுக்கடலில் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோட்டியா படகு மூலம் கொண்டு வரப்பட்ட முக்கோணம் மற்றும் உருளை வடிவ செயற்கை பவள பாறைகள் ரோப் கருவி மூலம் கடலில் இறக்கி விடப்பட்டன.
நாகை மாவட்டத்தில் கல்லார், வெள்ளப்பள்ளம், வானவன்மாதேவி, வேட்டைகாரணிருப்பு, விழுந்தமாவடி, திருப்பூண்டி, செருதூர் உள்ளிட்ட 9 இடங்களில் நடுக்கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணிகள் வருகின்ற 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்தார். செயற்கை பவளப்பாறைகள் அமைப்பதின் மூலம் மீன்வளம் பெருகி மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu