வேளாங்கண்ணி பிரதாபராமபுரம் ஸ்ரீ தீப்பாய்ந்த அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

வேளாங்கண்ணி பிரதாபராமபுரம் ஸ்ரீ தீப்பாய்ந்த அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
X
தீப்பாய்ந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக கடங்கள் புறப்பாடு நடந்தது.
வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ஸ்ரீ தீப்பாய்ந்த அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ தீப்பாய்ந்த அம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வந்தது. இன்று காலை பூர்ணாகுதி உடன் யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது.

மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ அம்மன் , பச்சையம்மன், வீரன் பொம்மி. வெள்ளையம்மாள் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.


இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself