கீழையூரில் தோட்டபயிர்கள் சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம் புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் தோட்டக்கலை பயிர்களான கத்தரி, கொத்தவரை, புடலை, பாகல், பீர்க்கங்காய், மரவள்ளி உள்ளிட்ட காய்கறிகளை இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெருமளவில் பயிர் செய்து இருந்தனர்.
தற்போது பெய்த வரலாறு காணாத கனமழையால் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகி சேதமடைந்தன. இதனால் உரம் மற்றும் மருந்து ஆள் கூலி ஆகிய செலவுகளை கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து இதுவரை தோட்டக்கலை அதிகாரிகளோ அல்லது வேளாண் துறை அதிகாரிகளோ எந்த ஒரு ஆய்வு செய்யவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதியில் துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu