நாகையில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் 2,000 நெல் மூட்டைகள் சேதம்
மழை நீரால் சேதமான நெல் மூட்டைகள்.
நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த குருக்கத்தி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது.
இதில் கொள்முதல் செய்யப்பட்ட 6000 மூட்டைகளும், விவசாயிகள் விற்பனைக்கு வைத்துள்ள சுமார் 2000 மேற்பட்ட மூட்டைகளும் மூன்று தினங்களாக பெய்த கனமழையால் மழை நீரில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகின.
குருக்கத்தி தமிழ்நாடு நுகர்பொருள் நேரடி கொள்முதல் நிலையம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் பாதுகாப்பதற்கு தற்காலிக கட்டிடம் இல்லை. இங்கு சுமார் ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை நுகர்பொருள் வாணிப கழக குடோன்க்கு எடுத்துச்செல்ல ஒரு லாரி மட்டுமே வருகிறது. அதில் சுமார் 300 முட்டைகள் மட்டுமே ஏற்றிச்செல்ல இயலும். இதனால் ஒரு நாளுக்கு சுமார் 700 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் நிலைய இருப்பில் சேர்க்கின்றன.
இதனால் சுமார் 6 ஆயிரம் மூட்டைகள் இருப்பில் உள்ளதாகவும், மூட்டைகள் அடுக்கப்பட்டு இருந்த பகுதிகள் மிகவும் தாழ்வான பகுதி என்பதால் இரு தினங்களாக பெய்த மழையில் அடிப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூட்டைகள் தண்ணீரில் முழுமையாக மூழ்கியுள்ளது.
நெல் மூட்டைகளை மூடுவதற்கு அரசு சார்பில் போதுமான தார்ப்பாய் வழங்கவில்லை எனவும், வழங்கிய தார்பாய்கள் கிழிந்த நிலையில் உள்ளதால் மேல்புறத்தில் உள்ள மூட்டைகளும் மழையில் நனைந்து உள்ளதாக தொழிலாளிகள் தெரிவிக்கின்றனர்.
நெல் கொள்முதல் செய்ய வழங்கப்படும் கோனி சாக்கு பை தரம் இல்லை எனவும், இதனால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் இருந்து நெல்மணிகள் சிந்தி எடை குறைவதாக தொழிலாளிகள் தெரிவிக்கின்றனர். 30 ஆண்டிற்கு மேல் இயங்கிவரும் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர இடம் அமைத்து தரவேண்டும். போதுமான அளவு நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கு தரமான தார்ப்பாய் வழங்கிட வேண்டும். கோணிப்பைகளில் தரம் உயர்த்தி வழங்க வேண்டும். நாளொன்றுக்கு இரண்டு லாரிகள் வந்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக குடோனிற்க்கு அனுப்ப இயலும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu