கல்லூரிகளில் 'சைபர் கிரைம் கிளப்' நாகை ஐ.ஜி., துவக்கம்
நாகை தனியார் கல்லூரியில் நடைபெற்ற சைபர் கிளப் துவக்க விழா.
இணையவழி குற்றங்களை தடுக்க மத்திய மண்டலத்தின் 9 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் 'சைபர் கிரைம் கிளப்'புகள் அமைக்கப்படும் என நாகை ஐ.ஜி., பாலகிருனஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தற்போது மக்கள் பயன்பாட்டில் இன்டர்நெட் சேவை அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்பு முதல் மருத்துவம், வணிகம், கல்வி, வங்கிக் கணக்கு உள்ளிட்ட அனைத்துமே இணையவழியில் நடைபெற்று வருகிறது.
இதனைப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடி போலி விளம்பரங்கள், போலியான பொருட்களை விற்பனை செய்வது, வேறு ஒரு பொருளைக் காட்டி பணம் கட்டிய பிறகு தரமற்ற பொருட்களை அனுப்புவது, பண மோசடி ஓடிபி நம்பர்களை பெற்று வங்கிகளில் பணத்தை திருடுவது, ஆன்லைன் சூதாட்டம், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை போன்ற பல்வேறு குற்றங்கள் இணையதளம் வழியாக நடைபெறுகிறது.
இதிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள போதிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் பாப்பா கோவிலிலுள்ள தனியார் கல்லூரியில் இணையவழி குற்றங்களை தடுக்கும் வகையில் சைபர் கிரைம் கிளப்புகள் தொடங்கப்பட்டது. மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்து குற்றங்களை தடுப்பது குறித்து பயிற்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர், கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாகை ஐ.ஜி., பாலகிருனஷ்ணன், மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் அனைத்து கல்லூரிகளிலும் சைபர் கிரைம் கிளப்புகள் தொடங்க இருப்பதாகவும், முதல் கிளப் இன்று தொடங்க பட்டிருப்பதாகவும அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த கிளப்பில் காவல்துறை அதிகாரி பங்கு வகிப்பார். இணையவழி குற்றங்களை அவ்வப்போது இந்த கிளப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டு கிளப்பின் மூலமாக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கிராமப்புறங்களுக்கு கொண்டு சேர்ப்பார்கள். கிராமப்புறங்களில் நடைபெறும் குற்றங்கள் பிறப்பின் மூலமாக காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும். இந்த கிளம்பி ஒரு இணைப்பு பாலமாக இருக்கும். இந்த கிளப்பில் மாதம் ஒரு முறை சைபர் கிரைம் காவல்துறையினர் கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவார்கள் என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu