நாகை மீனவர் வலையில் சிக்கிய அதிசய முதலை மீன்

நாகை மீனவர் வலையில் சிக்கிய அதிசய முதலை மீன்
X

மீனவர் வலையில் சிக்கிய அதிசய மீன். 

நாகையில், நாட்டுப் படகு ஒருவரின் வலையில் அதிசய முதலை மீன் ஒன்று சிக்கியது.

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி முகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினம்தோறும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இன்று மீன் பிடித்து கரைக்கு மீனவர்கள் திரும்பிய பொழுது ஒரு நாட்டுப் படகு ஒருவரின் வலையில் அதிசய முதலை மீன் ஒன்று சிக்கியது. தலை அச்சு அசல் முதலை போலவும், உடல் முதலையின் கடினமான தோல் போலவும் இருந்துள்ளது.

இதனை சக மீனவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் சிலர், இது மீன் இல்லை என விமர்சனமும் செய்துள்ளனர். 3 அடி நீளமும் 10 கிலோ எடையும் கொண்டிருந்தது. கரைக்கு கொண்டு வந்து வலையில் இருந்து எடுக்கும்போது மீன் உயிரோடு இருந்ததாகவும் பதப்படுத்துவதற்காக, ஐசில் வைத்தபோது இறந்துவிட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். ஒருவழியாக இந்த முதலை மீனை சமைத்தவுடன் ருசியை அறியலாம் என ஒருவர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!