வேளாங்கண்ணியில் கொரோனா விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம்

வேளாங்கண்ணியில் கொரோனா விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம்
X

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கொரோனா விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை காவல் ஆய்வாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவியல் கல்வி இயக்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் இன்று நடைபெற்றது.

வேளாங்கண்ணி பேராலயம் முன்பு நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டத்தை வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் வேளாங்கண்ணியில் இருந்து கருவேலங்கடை வரை சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!