நாகை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆட்சியர் ஆய்வு
நாகை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
நாகை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை மழைநீர் வடிந்த பின்பு மாவட்ட ஆட்சியர் ஆய்வு. இருபத்தி ஒரு ஆயிரம் எக்டேர் நெற்பயிர்கள் தண்ணீருக்குள் மூழ்கி இருப்பதாக தகவல். கணக்கு எடுக்கும் பணி நிறைவடைந்த பிறகு முழுமையான பாதிப்பு குறித்து தெரியும் என்றார் ஆட்சியர்.
நாகை மாவட்டத்தில் கடந்த 25 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக 55 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின, இந்நிலையில் கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட சோழ வித்தியபுரம், கருங்களி, காரப்பிடாகை ,மடப்புரம், திருமணம் குடி, உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்போது மழை நீர் வடிந்த வயல்களில் வேளாண் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார், அப்போது விவசாயிகள் அழுகிய நிலையில் உள்ள நெற்பயிர்களை மாவட்ட ஆட்சியரிடம் காட்டி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர், மேலும் வருவாய் துறை மற்றும் வேளாண் துறை ஊழியர்கள் இணைந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருவதையும் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட அனைத்து வயல்களிலும் முறையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஊழியர்களை அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்; கடந்தமுறை பெய்த முதல் மழையில் 5 ஆயிரத்து 900 எக்டேர் பயிர் பாதிக்கப்பட்டதாகவும் இரண்டாவது முறை பெய்த கன மழையில் இருபத்தி ஒரு ஆயிரம் எக்டேர் பயிர் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாகவும் முழுமையான பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு முடித்தபின்பு கூற முடியுமென தெரிவித்தார், இந்த ஆய்வின் போது வேளாண் உதவி இயக்குனர் தயாளன் வேளாண் அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu