நாகை மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணி: கலெக்டர் நேரில் ஆய்வு

நாகையில் ரூ.11 கோடியில் அமையும் மருத்துவக்கல்லூரி, மாணவர்கள் விடுதி, ஆய்வகங்கள் பணியை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

நாகப்பட்டினம் அடுத்த ஒரத்தூர் கிராமத்தில், 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது. கட்டுமான பணிகளை, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். அப்போது, கட்டுமான பணிகள் நிலை குறித்து ஒப்பந்த நிறுவனத்திடம் கேட்டறிந்தார். மேலும் மருத்துவக்கல்லூரி மற்றும் மாணவர்கள் விடுதி ஆய்வகங்கள் பணியை விரைந்து முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

மருத்துவக்கல்லூரி வளாகத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக செய்து தர, பொதுப்பணித் துறையினருக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். நாகப்பட்டினம் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்