நாகை அருகே கல்லூரி மாணவியை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய இளைஞர் கைது

நாகை அருகே கல்லூரி மாணவியை ஏமாற்றி  கர்ப்பிணியாக்கிய  இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட இளையபாரதி

நாகை அருகே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதை மறைத்து கல்லூரி மாணவியை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள மாணவி ஒருவர் நாகப்பட்டினத்தில் உள்ள பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் பேருந்தில் செல்லும்போது போது வேளாங்கண்ணி அடுத்த கிராமத்துமேட்டை சேர்ந்த கந்தசாமி மகன் இளையபாரதி (வயது 25)என்பவர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சில நாட்களில் காதலிப்பதாக கூறியுள்ளார். இளைஞரின் ஆசை வார்த்தைகளில் மயங்கிய பெண் இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

நெருங்கி பழகியதன் விளைவாக அந்த மாணவி தற்போது 7 மாத கர்ப்பினியாக உள்ளார்.இந்த நிலையில் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு இளையபாரதியிடம் கேட்டுள்ளார்.அதற்கு இளைய பாரதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண் இளைய பாரதியின் கிராமத்திற்கு சென்று விசாரித்த போது அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் இது குறித்து வேளாங்கண்ணி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து இளைய பாரதியை கைது செய்து விசாரணை வருகின்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!