நாகையில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

நாகையில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு
X

நாகையில் ஒன்றிய குழுவினர் மழை வெள்ள பாதிப்புகளை இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

நாகை மாவட்டத்தில் மத்திய குழுவினர் இன்று மழை வெள்ள பாதிப்புகளை இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

நாகை மாவட்டத்தில் ஒன்றிய குழுவினர் இன்று மழை வெள்ள பாதிப்புகளை இன்று நேரில் ஆய்வு செய்தனர். நாகை அடுத்துள்ள பாப்பாக்கோவில் பகுதியில் மழை நீரால் மூழ்கி நாசமான சம்பா நெற்பயிர்களை ஆய்வுசெய்த ஒன்றிய அரசின் உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் விவசாயிகளிடம் பாதிப்புகளை கேட்டறிந்தனர்.

அப்போது மழை வெள்ள பாதிப்புகள் குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஒன்றிய குழுவினரிடம் எடுத்துரைத்தார். தொடர்ந்து நாகை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்டத்தின் கால்நடைகள் பாதிப்பு, மனித உயிரிழப்புகள் விவரம், வீடுகள் சேதம், விவசாய பாதிப்பு உள்ளிட்டவைகள் அடங்கிய காணொளி தொகுப்பு ஒன்றிய குழுவினருக்கு திரையிடப்பட்டது. பின்னர் பிஆர்.பாண்டியன், காவிரி தனபாலன், உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்கள் மழை வெள்ள பாதிப்புகள் குறித்த கோரிக்கை மனுக்களை ஒன்றிய குழுவினரிடம் அளித்தனர்.

நாகை மாவட்டம் முழுவதும் மழை சேதங்களை மீட்டெடுக்க 200 கோடி ரூபாய்க்கு மேல் நிவாரண உதவி தேவை என நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஒன்றிய குழுவினருக்கு அறிக்கை தாக்கல் செய்தார். ஆய்வின்போது தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil