நாகை அருகே செல்லியம்மன் ஆலயத்தில் விவசாயம் செழிக்க காய்கறி சண்டிஹோமம்
காய்கறிகளால் சண்டி ஹோமம் நடந்தது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குபொய்கைநல்லூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு முக்கிய நிகழ்ச்சியான சண்டி ஹோமம் நேற்று மாலை தொடங்கியது. இன்று காலை நடைபெற்ற சண்டி ஹோமத்தில் தெற்கு பொய்கை நல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விளையக்கூடிய கத்திரிக்காய் மாங்காய் வெண்டைக்காய் பாகற்காய் கீரை பனங்கிழங்கு எலுமிச்சை நார்த்தங்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் வாழை கொய்யா உள்ளிட்ட கனிகள் 3 முதல் 4 டன் வரை யாகத்தில் போட்டு சிறப்பு வேள்வி நடத்தினர்.
இதில் 2000 லிட்டர் அளவிற்கு நெய் பயன்படுத்தியதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தங்கள் கிராமத்தில் விளைவிக்கக் கூடிய காய்கறிகள் சுற்றியுள்ள திருவாரூர் கும்பகோணம் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் காய்கறி விவசாயம் செழிக்க வேண்டியும் இயற்கையிடமிருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய தொடர்ந்து 9வது ஆண்டாக இந்த காய்கறி சண்டிஹோமம் நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இன்று மாலை யாகத்தில் வைக்கப்பட்டுள்ள கடல்நீர் பூஜைக்கு பிறகு செல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu